ஜெயஸ்ரீ ஷங்கர்

Saturday, June 4, 2016

அக்னிஹோத்ரம்

நமது இல்லத்தில் நல்ல எண்ண அலைகள் சூழவும், மன அமைதி பெறவும் ஒரே வழி அக்னிஹோத்ரம் செய்வது தான். அதை நாம் தினமும் வீட்டிலேயே செய்யலாம். அக்னிஹோத்ரம் எனும் மிக எளிய வழி இதோ செய்முறை விளக்கங்களுடன்.


அக்னிஹோத்ரம் என்பது என்ன ?


பூமியை சுற்றி சந்திரன், சூரியன் மற்றும் பல கிரகங்கள் ஓடுகின்றன. பூமி தன்னை தானே சுற்றிக் கொள்ளும்போது அந்த கிரகங்கள் ஒவ்வொரு இடங்களிலும் நிற்கின்றன. அவற்றில் சில குறிப்பிட்ட நேரங்களில் மனிதன், மிருகம் மற்றும் நமது எண்ணங்கள் என அனைத்தும் ஒரு மாறுதலுக்கு உள்ளாகின்றன. உண்மையைக் கூறினால் அலைகழிக்கப்படும் மனதையும் கூட அந்த குறிப்பிட்ட நேரங்களில் ஸ்திரப்படுத்தினால் நாமும் மனத்தைக் கட்டுப்படுத்தும் திறமையைப் பெற்று விடுவோம். அந்த குறிப்பிட்ட நேரத்தில் நம்மை சுற்றி உள்ள பிரபஞ்சத்தின் வெளியை சுத்தப்படுத்தினால் போதும். அப்படிப்பட்ட நேரத்தில் நம் வீட்டில் உள்ள வெற்று இடத்தையும் நம்மையும் தூய்மைப்படுத்தும் , மன அமைதியைத் தரும் . அதை பெற சில நிமிடங்களே செய்ய வேண்டிய சிறிய வேள்வியே 'அக்னிஹோத்ரம்' என்பது.


அக்னிஹோத்ரா சூழ்நிலை என்பது நமது வீட்டில் நம்மை சுற்றி உள்ள வெற்று வெளியில் உள்ள அதிர்வலைகளைக் கட்டுப்படுத்தி தூய்மை ஆக்கும். அது நம்முடைய நரம்பு மண்டலங்களை ஒழுங்குபடுத்தும். நம் வீட்டில்
வைத்துள்ள செடிகொடிகளும் கூட அக்னிஹோத்ரா சூழ்நிலையில் நன்கு வளரும். நமது வீட்டில் அமைதி நிலைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தினமும் நான் செய்து முடித்த அக்னிஹோத்ரா சாம்பல் மிகவும் புனிதமானது. தெய்வீகத்தன்மை நிறைந்தது. நெற்றியில் நீறு போல் இட்டுக் கொள்ள அஷ்டஐஸ்வர்யமும் கிட்டும். வெற்றி நமைத் தொடர்ந்து வரும். கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். ஆன்மீக எழுச்சி உண்டாகும். அதன் சாம்பலை செடிகளுக்கு உரமாக இட்டால் செடிகளில் அபரித வளர்ச்சியைக் காணலாம். இது கண்கூடு. இது ஒரு புனித சுய அனுபவமும் கூட. சொன்னாலும் படித்தாலும் கேட்டாலும் கூடப் புரியாதது. செய்து அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே உள்ளம் உயர்நிலை அடையும். இது நிச்சயம்.

அக்னிஹோத்ரா புதிதல்ல. இது பற்றி நான்கு வேதங்களிலும்- ரிக், யுஜுர்வன, சாம மற்றும் அதர்வண வேதங்களில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டு உள்ளது. அக்னிஹோத்ராவை வேத நாராயணனை வேண்டியே செய்தார்கள். ரிஷி முனிவர்கள் துவக்கி வைத்த அதை அப்போது சாஸ்திர சம்பிரதாயங்களில் ஊறித் திளைத்த பிராமணர்களே செய்து வந்துள்ளார்கள். வேதத்தில் கூறப்பட்ட முறையிலான அக்னிஹோத்ராவை இன்னமும் கேரளாவில் சில நம்பூத்ரி பிராமணர்கள் கடைப்பிடித்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால் காலப்போக்கில் அதே ஹோமத்தை நமக்குத் தேவையான அளவில் மாறுதலாக்கித் தந்து உள்ளார்கள். கடைபிடிக்கப்படும் முறைதான் வேறுபட்டு உள்ளதே தவிர அதன் முடிவில் நமக்கு கிடைக்கும் பலன் இரண்டும் ஒன்றுதான்.

அக்னிஹோத்ரம் செய்யத் தேவையான பொருட்கள்

1. செம்பினால் ஆன ஹோம குண்டம். அனைத்துக் பூஜை கடைகளிலும் கிடைக்கும்.
2. காய்ந்த பசு வரட்டி(இப்பொழுதெல்லாம் ஆர்கானிக் கடைகளில் விற்பனை செய்கிறார்கள்)
3. பசு நெய் (சுத்தமானதாக இருக்கட்டும்)
4. முழு சிவப்பு அரிசி (முனை முறியாதது )
5. சூரிய உதய, அஸ்தமன நேர அட்டவணை. (இணையத்தில் கிடைக்கும்.) அன்றைய நாட்காட்டியிலும் இருக்கும்.


இப்போது அக்னிஹோத்ரம் செய்முறை :


பசு வரட்டியை நான்கு அல்லது மேற்பட்ட துண்டுகளாக உடைத்து, சிறிது நெய்யில் தோய்த்து, ஹோம குண்டத்தில் காற்று புகும்படி அடுக்கவும். ஒரு வரட்டியில் நெய் தடவி, தீக்குச்சியால் நெருப்பு மூட்டி (அல்லது பச்சைக் கற்பூரம் உபயோகிக்கவும்) ஹோமகுண்டதின் நடுவில் வைக்கவும். சிறிய விசிறியால் நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்ளலாம். வாயால் ஊத வேண்டாம். சூரிய உதய, அஸ்தமனத்திற்கு முன் நெருப்பு தயாராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். (இரு வேலைகளிலும் செய்ய வேண்டும்.)


கையில் சிறிது சிவப்பு அரிசியை எடுத்து நெய்யில் தோய்த்து இரு பாகமாக பிரித்து வைத்துக்கொள்ளவும். சூரிய உதய, அஸ்தமன நேரம்போது, முதல் மந்திரம் உச்சரித்து ஸ்வாஹா எனும்போது அரிசியின் ஒரு பாகத்தை நெருப்பில் போடவும். பிறகு இரண்டாவது மந்திரம் சொல்லி அடுத்த பாகத்தைப் போடவும். (கை விரல்களில் அடங்கும் அளவு அரிசி இருந்தால் போதும்). நேரம் தவறி விட்டால், பலன் குறைவு.


மந்திரம்
சூரிய உதயத்தின் போது
1. சூரியாய ஸ்வாஹா
(நெய்யில் கலந்த சிவப்பு அரிசியின் ஒரு பகுதியை நெருப்பில் போடவும்)
சூரியாய இதம் ந மம
2. ப்ரஜா பதயே ஸ்வாஹா
(நெய்யில் கலந்த சிவப்பு அரிசியின் அடுத்த பகுதியை நெருப்பில் போடவும்)
ப்ரஜா பதயே இதம் ந மம

சூரிய அஸ்தமனத்தின் போது
1. அக்னயே ஸ்வாஹா
(நெய்யில் கலந்த சிவப்பு அரிசியின் ஒரு பகுதியை நெருப்பில் போடவும்)
அக்னயே இதம் ந மம
2. ப்ரஜா பதயே ஸ்வாஹா
(நெய்யில் கலந்த சிவப்பு அரிசியின் அடுத்த பகுதியை நெருப்பில் போடவும்)
ப்ரஜா பதயே இதம் ந மம

வ்யாஹ்ருதி ஹோமம்
செய்முறை
· அக்னிஹோத்ரம் செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இந்த ஹோமம் செய்யலாம்.
· அக்னிஹோத்ரதிற்கு நெருப்பு தயார் செய்வது போலவே செய்யவேண்டும்.
· பசு நெய் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. செம்பினால் செய்யப்பட்ட சிறிய கிண்ணத்தாலோ, சிறு கரண்டியாலோ (உத்திரியம்) நெய்யை விடலாம்.
- இந்த மந்திரம் 4 வரிகள் கொண்டது. ஒவ்வொரு வரியிலும், ஸ்வாஹா சொல்லும்போது சிறிது நெய் விட்டு, 4-வது வரியின் ஸ்வாஹாவின் போது முழுவதுமாக விட வேண்டும்.
· ஏதாவது புது செயலை ஆரம்பிக்கும் முன் செய்வது நல்ல பலனளிக்கும். ஒரு முறை தான் செய்ய வேண்டும்.
மந்திரம்
பூஹ் ஸ்வாஹா (ஒரு சொட்டு நெய் விடவும்), அக்னயே இதம் ந மம
புவஹ் ஸ்வாஹா (ஒரு சொட்டு நெய் விடவும்), வாயவே இதம் ந மம
ஸ்வஹ் ஸ்வாஹா (ஒரு சொட்டு நெய் விடவும்), சூர்யாய இதம் ந மம
பூர் புவஹ் ஸ்வஹ் ஸ்வாஹா (எடுத்த நெய் முழுவதும் விடவும்),
ப்ரஜா பதயே இதம் ந மம


ஓம் த்ரியம்பகம் ஹோமம் செய்முறைடுமானாலும் செய்யலாம்.
· ஒரே மந்திரம், பலமுறை சொல்லலாம். ஒவ்வொரு முறையும் ஸ்வாஹாவிற்குப் பிறகு நெய் விட வேண்டும்.
· தினமும் 15 நிமிடம் முதல் 4 மணி நேரம் வரை செய்வது, நோயாளிகளுக்கும், தாவரங்களுக்கும் நல்ல பலன் தரும்.
· பௌர்ணமி, அம்மாவாசை தினங்களில் முழு தினமும் (12 அல்லது 24 மணி நேரம்) செய்வது, அதிக பலன் தரக்கூடியது.
· ஒருவரே செய்ய வேண்டும் என்பதில்லை, ஆட்களை மாற்றிக் கொள்ளலாம்.
· இரவில் குழந்தை தூங்கும் அறையில் செய்வது, குழந்தைக்கு நல்ல பலன் தரும்.
மந்திரம்
ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத், ஸ்வாஹா
(ஒரு சொட்டு நெய் விடவும்).

அப்படி செய்து முடித்தப் பின் ஐந்து நிமிடங்கள் கண்களை மூடி வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்.ஹோமம் முடிந்தது. வேறு எதுவும் செய்யத் தேவை இல்லை. அதன் பலன் பத்தே நாட்களில் தெரியத் துவங்கும். வீடு அமைதியாக உள்ள உணர்வு ஏற்படும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நாம் செய்யும் காரியங்கள் தடங்கல் இன்றி நடக்கும். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். சிறக்கும்.


வ்யாஹ்ருதி ஹோமம்
செய்முறை
· அக்னிஹோத்ரம் செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இந்த ஹோமம் செய்யலாம்.
· அக்னிஹோத்ரதிற்கு நெருப்பு தயார் செய்வது போலவே செய்யவேண்டும்.
· பசு நெய் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. செம்பினால் செய்யப்பட்ட சிறிய கிண்ணத்தாலோ, சிறு கரண்டியாலோ (உத்திரியம்) நெய்யை விடலாம்.
- இந்த மந்திரம் 4 வரிகள் கொண்டது. ஒவ்வொரு வரியிலும், ஸ்வாஹா சொல்லும்போது சிறிது நெய் விட்டு, 4-வது வரியின் ஸ்வாஹாவின் போது முழுவதுமாக விட வேண்டும்.
· ஏதாவது புது செயலை ஆரம்பிக்கும் முன் செய்வது நல்ல பலனளிக்கும். ஒரு முறை தான் செய்ய வேண்டும்.
மந்திரம்
பூஹ் ஸ்வாஹா (ஒரு சொட்டு நெய் விடவும்), அக்னயே இதம் ந மம
புவஹ் ஸ்வாஹா (ஒரு சொட்டு நெய் விடவும்), வாயவே இதம் ந மம
ஸ்வஹ் ஸ்வாஹா (ஒரு சொட்டு நெய் விடவும்),
சூர்யாய இதம் ந மம
பூர் புவஹ் ஸ்வஹ் ஸ்வாஹா (எடுத்த நெய் முழுவதும் விடவும்),
ப்ரஜா பதயே இதம் ந மம


ஓம் த்ரியம்பகம் ஹோமம்
செய்முறை
அக்னிஹோத்ரம் செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இந்த ஹோமம் செய்யலாம்.
ஆரம்பத்திலும் முடிவிலும் வ்யாஹ்ருதி ஹோமம் செய்ய வேண்டும்.
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.
· ஒரே மந்திரம், பலமுறை சொல்லலாம்.
ஒவ்வொரு முறையும் ஸ்வாஹாவிற்குப் பிறகு
நெய் விட வேண்டும்.
· தினமும் 15 நிமிடம் முதல் 4 மணி நேரம் வரை செய்வது, நோயாளிகளுக்கும், தாவரங்களுக்கும் நல்ல பலன் தரும்.
·
பௌர்ணமி, அம்மாவாசை தினங்களில் முழு
தினமும் (12 அல்லது 24 மணி நேரம்) செய்வது,
அதிக பலன் தரக்கூடியது.
· ஒருவரே செய்ய வேண்டும் என்பதில்லை, ஆட்களை மாற்றிக் கொள்ளலாம்.
·
மந்திரம்
ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத், ஸ்வாஹா
(ஒரு சொட்டு நெய் விடவும்).
அக்னிஹோத்ரம் செய்வதற்கு உகந்த, நேரத்தை
நீங்கள் இருக்கும் இடத்தின், (அட்சய ரேகை,
தீர்க்க ரேகை), சூரிய உதய நேரம், சூரிய
அஸ்தமன நேரம் கொண்டு துல்லியமான
அக்னிஹோத்ர நேரத்தை மற்றும் அதன்
காலத்திற்கு ஏற்ற மந்திரத்தை காட்டும் கடிகை
என்னும் விண்டோஸ் போனிற்க்காக (Windows
phone) மென்பொருள் திரு.டி .ராமகிருஷ்ணன்
அவர்களால் செய்து அளிக்கப்பட்டது. அவருக்கு
எனது நன்றிகள். இது அக்னிஹோத்ரம்
மட்டுமின்றி, மிக முக்கியமான ஹோரை,
குளிகன், இராகுகாலம், எமகண்டம், சூரிய உதய
மற்றும் மறைவு நேரங்கள், பருவ காலங்கள்
மற்றும் வேறு பல விஷயங்களை காட்டுகிறது.
இந்த கடிகையை விண்டோஸ் ஸ்டோரில்
இங்கே (http://www.windowsphone.com/en-
in/store/app/kadigai/0e6be181-bc0b-4555-85fe-d65def4a8998)
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment